என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » தமிழக வீரர்
நீங்கள் தேடியது "தமிழக வீரர்"
மெல்போர்னில் நடைபெற்று வரும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பந்துவீசி வருகிறது. ஆடும் லெவனில் தமிழக வீரர் விஜய் சங்கர் இடம்பெற்றுள்ளார். #AUSvIND #TeamIndia #VijayShankar
மெல்போர்ன்:
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 ஒரு நாள் போட்டித் தொடரில் சிட்னியில் நடந்த முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 34 ரன்னில் வென்றது. அடிலெய்டில் நடந்த 2-வது போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என்ற சமநிலையில் இருக்கிறது.
இரு அணிகளிலும் இடம் பெற்றுள்ள வீரர்களின் விவரம்:-
இந்தியா: ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), எம்.எஸ்.டோனி (விக்கெட் கீப்பர்) கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், ஜடேஜா, புவனேஷ்வர்குமார், முகம்மது சமி, யுஸ்வேந்திர சாஹல்
ஆஸ்திரேலியா: அலெக்ஸ் காரி (விக்கெட் கீப்பர்) ஆரோன் பிஞ்ச் (கேப்டன்) உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், மார்கஸ் ஸ்டோனிஸ், மேக்ஸ்வெல், ரிச்சர்ட்சன், பில்லி ஸ்டான்லேக், பீட்டர் சிடில், ஆடம் ஜம்பா,
கடந்த போட்டியை போலவே இந்த ஆட்டத்திலும் வென்று தொடரை கைப்பற்றும் முயற்சியில் இந்திய வீரர்கள் விளையாடி வருகின்றனர். #AUSvIND #TeamIndia #VijayShankar

இந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன், பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில், அம்பத்தி ராயுடு, முகம்மது சிராஜ், குல்தீப் யாதவ் கழற்றி விடப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக தமிழக வீரர் விஜய் சங்கர், கேதர் ஜாதவ், சேஹல் ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர்.
இரு அணிகளிலும் இடம் பெற்றுள்ள வீரர்களின் விவரம்:-
இந்தியா: ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), எம்.எஸ்.டோனி (விக்கெட் கீப்பர்) கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், ஜடேஜா, புவனேஷ்வர்குமார், முகம்மது சமி, யுஸ்வேந்திர சாஹல்
ஆஸ்திரேலியா: அலெக்ஸ் காரி (விக்கெட் கீப்பர்) ஆரோன் பிஞ்ச் (கேப்டன்) உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், மார்கஸ் ஸ்டோனிஸ், மேக்ஸ்வெல், ரிச்சர்ட்சன், பில்லி ஸ்டான்லேக், பீட்டர் சிடில், ஆடம் ஜம்பா,
கடந்த போட்டியை போலவே இந்த ஆட்டத்திலும் வென்று தொடரை கைப்பற்றும் முயற்சியில் இந்திய வீரர்கள் விளையாடி வருகின்றனர். #AUSvIND #TeamIndia #VijayShankar
ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழ்நாடு அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்கால் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை பெற்றது. #RanjiTrophy #Bengal #TamilNadu
சென்னை:
ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழ்நாடு - பெங்கால் அணிகள் இடையிலான லீக் (பி பிரிவு) ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் கடந்த 28-ந்தேதி தொடங்கியது. முதல் இன்னிங்சில் தமிழகம் 263 ரன்களும், பெங்கால் 189 ரன்களும் எடுத்தன. 74 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தமிழக அணி 141 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 216 ரன்கள் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய பெங்கால் அணி 3-வது நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் எடுத்திருந்தது.
இந்த நிலையில் கடைசி நாளான நேற்று தமிழக பவுலர்கள் கடுமையான நெருக்கடி கொடுத்தனர். அந்த அணி 150 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இறுதி கட்டத்தில் சட்டர்ஜீயும், பிரதிப்தா பிரமானிக்கும் மனஉறுதியுடன் போராடினர். சட்டர்ஜீ 40 ரன்னிலும், அடுத்து வந்த அசோக் திண்டா ஒரு ரன்னிலும் வெளியேறினர். அப்போது அந்த அணியின் வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்பட்டது. 10-வது விக்கெட்டுக்கு இறங்கிய இஷான் போரெலுக்கு, ரஹில் ஷாவின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. கேட்டு தமிழக வீரர்கள் முறையிட்டனர். நடுவர் வழங்க மறுத்தார். அதற்குள் அவர்கள் ஒரு ரன் ஓடி எடுத்தனர். முடிவில் பெங்கால் அணி 82.5 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 216 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை பெற்றது. பிரமானிக் 25 ரன்களுடன் (97 பந்து, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தார். தமிழக சுழற்பந்து வீச்சாளர் ரஹில் ஷா 5 விக்கெட்டுகளை அறுவடை செய்தும் பலன் இல்லாமல் போய் விட்டது. #RanjiTrophy #Bengal #TamilNadu

15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான ஆசிய பேட்மின்டன் போட்டியில் சென்னை வீரர் சங்கர் முத்துசாமி வெண்கலப்பதக்கம் பெற்றார். #AsianJuniorBadminton
15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான ஆசிய பேட்மிண்டன் போட்டி மியான்மர் நாட்டில் நடந்தது. இதில் பங்கேற்ற சென்னை வீரர் சங்கர் முத்துசாமி வெண்கலப்பதக்கம் பெற்றார். இதன்மூலம் ஆசிய பேட்மிண்டன் போட்டியில் பதக்கம் வென்ற முதல் தமிழக வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
சங்கர் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் நேபாள வீரரையும், கால்இறுதியில் மலேசிய வீரரையும் தோற்கடித்தார். அரை இறுதியில் கொரியா வீரரிடம் போராடி தோற்றார்.
அவர் முகப்பேரில் உள்ள பயர்பால் அகாடமியில் பயிற்சியாளர் அரவிந்தனிடம் பயிற்சி பெற்று வருகிறார். #AsianJuniorBadminton

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரருக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். GKVasan #DharunAyyasamy #AsianGames2018
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஹரியானா வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றிருப்பதும், தமிழக வீரர் தருண் அய்யாச்சாமி வெள்ளிப்பதக்கம் வென்றிருப்பதும் வாழ்த்துக்குரியது. பாராட்டுக்குரியது.
உலக அளவில் தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கும் விதமாக வெற்றி பெற்றிருப்பதும், சாதனை நிகழ்த்தியிருப்பதும் தமிழர்களுக்கும், இந்திய நாட்டிற்கும் பெருமையாக இருக்கிறது.
மத்திய மாநில அரசுகள் பதக்கங்கள் பெறும் விளையாட்டு வீரர்களுக்கு மரியாதை செய்வதும், ஊக்கத் தொகை கொடுப்பதும், விருதுகள் வழங்குவதும், பாராட்டுவதும் சாலச்சிறந்தது.
தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, வெள்ளிப்பதக்கம் வென்ற தருண் அய்யாச்சாமி தொடர்ந்து விளையாட்டில் ஈடுபட்டு உலக அளவில் மென்மேலும் பல்வேறு விருதுகளை பெற்று சிறந்து விளங்கி தாய் நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார். #GKVasan #DharunAyyasamy #AsianGames2018
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஹரியானா வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றிருப்பதும், தமிழக வீரர் தருண் அய்யாச்சாமி வெள்ளிப்பதக்கம் வென்றிருப்பதும் வாழ்த்துக்குரியது. பாராட்டுக்குரியது.
தருண் அய்யாச்சாமி 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப்போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறார். அதுவும் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 49 வினாடிக்கும் குறைவாக ஓடி, தேசிய சாதனையை நிகழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் நமது தமிழக வீரர் தருண் அய்யாச்சாமி என்பது பெரிதும் பாராட்டுக்குரியது.
மத்திய மாநில அரசுகள் பதக்கங்கள் பெறும் விளையாட்டு வீரர்களுக்கு மரியாதை செய்வதும், ஊக்கத் தொகை கொடுப்பதும், விருதுகள் வழங்குவதும், பாராட்டுவதும் சாலச்சிறந்தது.
தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, வெள்ளிப்பதக்கம் வென்ற தருண் அய்யாச்சாமி தொடர்ந்து விளையாட்டில் ஈடுபட்டு உலக அளவில் மென்மேலும் பல்வேறு விருதுகளை பெற்று சிறந்து விளங்கி தாய் நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார். #GKVasan #DharunAyyasamy #AsianGames2018
×

X